அறுவை சிகிச்சையில் இரண்டு பெண் குழந்தைகள ்…

திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக அறுவை சிகிச்சையில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா விளாச்சேரி முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் அப்துல் ராஜா .இவரது மனைவி பானு (வயது 22) இவர் தற்போது கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். பிரசவத்திற்காக திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பானுவிற்கு அறுவை சிகிச்சை மூலம் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது.

திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கு தற்போது புதிதாக கட்டி முடிக்கப்பட்டு முதல்முறையாக பானுவிற்கு பிரசவ அறுவை சிகிச்சை செய்ததில் பெண் குழந்தைகள் பிறந்தன என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் செல்வராஜ் மற்றும் அறுவை சிகிட்சை நிபுணர் Dr.சக்தி, மயக்கவியல் நிபுணர் பாக்கிய லெட்சுமி, குழந்தை நலவியல் நிபுணர் பக்ரூதின் ஆகியோர் பிறந்த குழந்தைகளை தந்தை அப்துல் ராஜாவிடம் வழங்கினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: