தண்ணீர் தொட்டியில் மூச்சு திணறி தொழிலாளி மயக்கம்…

தண்ணீர் தொட்டியில்
மூச்சுத்திணறி
தொழிலாளி மயக்கம்

தீயணைப்பு படை மீட்டது

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் கபீர் (வயது 35 ). இவர் இன்று காலை அண்ணாநகர் தனியார் கல்லூரி எதிர்ப்புறம் உள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்பு தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி பெயிண்ட் அடிக்க சென்றார்.

அப்போது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்தில் மயங்கி விழுந்தார்.

இதுதொடர்பாக தல்லாகுளம் தீயணைப்பு படைக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து தல்லாகுளம் தீயணைப்பு படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கூலித்தொழிலாளி கபீரை மீட்டு, மதுரை அரசினர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: