லாரி மோதி மூதாட்டி சாவு

லாரிமோதி மூதாட்டி பலி

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேடு வாடிவாசல் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டி மீது டிப்பர் லாரி மோதி அடிபட்டு அதே இடத்தில் இறந்தார்.
பாலமேடு பிருந்தாநகரைச் சேர்ந்தவர் நாகன். பந்தல் அமைப்பாளரான இவரது மனைவி முத்தம்மாள் வயது 65. பாலமேட்டில் சாலையில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி மோதி அதே இடத்தில் முத்தம்மாள் அடிபட்டு இறந்தார்.
விபத்தை ஏற்படுத்தி விட்டு, லாரியை விட்டு, விட்டு டிரைவர் தலைமறைவாகி விட்டார்.
இது குறித்து பாலமேடு காவல் உதவி ஆய்வாளர் பாலசுப்ரமணி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: