அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேர் கைது. .

சாத்தூர் அருகே வீட்டில் அனுமதியில்லாமல் பட்டாசு தயாரித்த
5 பேர் கைது…..

சாத்தூர் :

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள வற்றிலையூரணி, ஆனைக்கூட்டம் பகுதிகளில் வீடுகளில் அனுமதியில்லாமல் பட்டாசுகள், சரவெடிகள் தயாரிக்கப்படுவதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு புகார்கள் வந்தது. புகாரின் பேரில் எஸ்ஐ சதீஷ்குமார் தலைமையில் போலீசார், அந்தப்பகுதி வீடுகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஆனைக்கூட்டத்தை சேர்ந்த சர்க்கரைராஜ், ஆனந்தராஜ், வெற்றிலையூரணி பகுதியைச் சேர்ந்த சுரேஷ், ஜெயராஜ், கருப்பசாமி ஆகிய 5 பேரும் வீடுகளில் பட்டாசு, சரவெடி, கருந்திரி தயாரிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட 5 பேரையும் கைது செய்து, பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: