நடமாடும் ரேசன் கடை அமைச்சர் தொடங்கி வைத் தார்..

விருதுநகரில் நடமாடும் ரேசன் கடையை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி துவக்கி வைத்தார்……

விருதுநகர் :

விருதுநகர் மாவட்டத்தில் 36 நடமாடும் ரேசன் பொருட்கள் வாகனத்தை, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் மக்களின் வசதிக்காக 3501 நடமாடும் ரேசன் கடைகளை, முதலமைச்சர் துவக்கி வைத்தார். விருதுநகர் மாவட்டத்தில் 49 கூட்டுறவு நிறுவனங்கள், 36 நடமாடும் ரேசன் வாகனங்கள் மூலம் 7 ஆயிரத்து 999 பேருக்கு இந்த வாகனங்கள் மூலம் ரேசன் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. மாவட்ட கலெக்டர் கண்ணன் முன்னிலையில், கலெக்டர் அலுவலகத்திலிருந்து நடமாடும் ரேசன் பொருட்கள் வாகனத்தை, அமைச்சர் ராஜேந்திபாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபா உட்பட கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: