நிலுவைத் தொகை வழங்கக் கோரி விவசாயிகள் ஆர ்ப்பாட்டம்..

ராஜபாளையத்தில் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க கோரி காத்திருப்பு போராட்டம்……
விவசாயி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்……

ராஜபாளையம் :

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், கரும்பு விவசாயிகளுக்கு பல மாதங்களாக வழங்கப்படாத நிலுவைத் தொகையை உடனே வழங்ககோரி, தென்காசி மாவட்ட தனியார் சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் செய்ய முடிவு செய்தனர். ராஜபாளையம் பகுதி கரும்பு விவசாயிகளை காத்திருப்பு போராட்டத்திற்கு வழியனுப்பும் நிகழ்ச்சியில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு கலந்து கொண்டார். கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலை 22 மாதங்களாக
நிலுவைப் பணத்தை வழங்காமல் உள்ளதை கண்டித்து விவசாயி அய்யாக்கண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் அய்யாக்கண்ணு பேசும்போது, கரும்பு விவசாயிகள் ஆலைக்கு கரும்பு அளித்த 15 நாட்களுக்குள் ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு கரும்புக்கு உரிய பணத்தை தர வேண்டும் என சட்டம் கூறுகிறது. சட்டப்படி ஆலை நிர்வாகம் பணம் தர தவறினால், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆலையின் மீது நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு பணம் பெற்று தர வேண்டும். இந்த சட்டத்தின்படி வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் பிரச்சனை ஏற்பட்டால், மாவட்ட ஆட்சித் தலைவர் தான் பொறுப்பு என்றும், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. தனியார் சக்கரை ஆலை நிறுவனம் விவசாயிகளுக்கு 22 மாதங்களாக கொள்முதல் செய்த கரும்பிற்கு பணம் தரவில்லை, இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் தொழில் துறை அமைச்சரிடம் முறையிட்டும் இதுவரை பலன் கிடைக்கவில்லை எனக் கூறினார்.
விவசாயிகளை அழிப்பதற்காகவே வேளாண்மை சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் விவசாயம் கார்ப்பரேட் கைவசம் சென்றுவிடும். கார்ப்பரேட் கம்பெனிகள் சொல்வதைத்தான் விவசாயிகள் கேட்க வேண்டிய நிலை ஏற்படும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளால் மண்ணும் பாதிக்கப்படும். விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல முடியாது. பிரதமர் மோடி அவர்கள் தேர்தலுக்கு முன் விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு லாபம் அளிப்பேன் என்று கூறினார். ஆனால் நெல் கொள்முதலுக்கு வெறும் 4ரூபாய் 50 காசும், கரும்பிற்கு வெறும் 200 ரூபாயும் தான் உயர்த்தப்பட்டுள்ளது. வேளாண்மை சட்டம் மூலம் விவசாயம் அழிவை நோக்கி செல்கிறது. விவசாயிகள் அழிந்தால், வருங்கால சந்ததியினரும் அழிவை சந்திக்கும் நிலை ஏற்படும் என்று அய்யாக்கண்ணு கூறினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: