ஆடிப்பூர விழா ரத்து: துணை ஆணையர்

திருப்பரங்குன்றம் ஆடிப்பூர திருவிழா ரத்து
துணை
ஆணையர் அறிவிப்பு.

மதுரை

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறவிருந்த ஆடிப்பூர விழா ரத்து செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆடிப்பூர விழா நடைபெறும். இதனைத் தொடர்ந்து கோவர்த்தனாம்பிகை வீதிஉலா வருவார்

தற்பொழுது கொரானா வைரஸ் தொற்று ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுவதால் திருக்கோயில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவில் உள் விழா நிகழ்ச்சியாக நடைபெறும் என கோவில் துணை ஆணையர் மு. ராமசாமி அறிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தற்போது கோவில் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நான்கு மாதங்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: