அலங்காநல்லூரில் இ.கம்யூ. கட்சியினர் ஆர்ப ்பாட்டம்…

அனைத்து குடும்பங்களுக்கு தாலிக்கு தங்கம், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இ.கம்யூ கட்சி ஆர்ப்பாட்டம்:

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக் கடையில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வு, வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்தல், அனைத்து குடும்பங்களுக்கும் தாலிக்கு தங்கம், கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 15.ஆயிரம் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியூறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூ. கட்சியின் ஒன்றியச் செயலாளர் குமரேசன் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாவட்ட துணைச் செயலாளர் அலெக்ஸ், சிபிஐ மாவட்டச் செயலாளர் காளிதாஸ் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: