மாணவர்கள் கின்னஸ் சாதனை முயற்சி..

கொரானா வைரஸால் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ள கிராமிய கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மதுரை ஆனையூரில் மாணவர்கள் மரக்காலில் 10 மணிநேரம் நடனமாடி கின்னஸ் சாதனை முயற்சி*

கொரானா மைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரானா வைரஸால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கிராமிய கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மதுரை மாவட்டம் ஆனையூரில் விகேஎஸ் சிலம்பம் யோகா மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் சோழன் உலக சாதனை புத்தகம் சார்பாக தொடர்ந்து 10 மணிநேரம் மரக்காலில் நின்று நடனமாடியும் ஒற்றைக்கையில் சிலம்பம் சுற்றியும் கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் கஜேந்திரன், காவல் சார்பு ஆய்வாளர் பிரேம்சந்திரன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் சிலம்ப யோகா ஆசான் சண்முகவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து மாணவ மாணவிகள் ஒற்றைக்கையில் சிலம்பம் சுற்றியும் மரக்காலில் 10 மணிநேரம் தொடர்ந்து நடனமாடி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: