ஒன்றியக் குழுக் கூட்டம்..

யூனியன்கவுன்சிலர்களுக்கு
அலுவலககட்டிடம் கட்டிடவேண்டும்.

ஒன்றியக்குழுகூட்டத்தில் கோரிக்கை:

வாடிப்பட்டி

யூனியன்கவுன்சிலர்களுக்கு தனியாக அலுவலகம் கட்டிடவேண்டும் என்று,
ஒன்றியக்குழு கூட்டத்தில் கோரிக்கைவிடுத்தனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி
ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்ட அறையில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
இந்தக்
கூட்டத்திற்கு, யூனியன்சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா தலைமை தாங்கினார்.
யூனியன்கமிஷனர்கள்(வ.ஊ.) ராஜா, (கி.ஊ.,)சாந்திராணி ஆகியோர் முன்னிலை
வகித்தனர். துணைசேர்மன் தனலெட்சுமி கண்ணன் வரவேற்றார்.
இந்தக் கூட்டத்தில்
உதவியாளர் பாலசந்தர் தீர்மான
அறிக்கை வாசித்தார். இதில், கே.பவித்ரா,
மா.தங்கபாண்டியன், முத்துபாண்டி, க.தங்கபாண்டி, பசும் பொன்மாறன்,
வீ.ரேகா, சிவக்குமார், கார்த்திகா, பஞ்சவர்ணம், மு.தனபாலன், சுப்பிரமணி,
துணை வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் முத்துபாண்டி, புனிதா, சாந்தி, பொறியாளர்
குமரேசன், ஓன்றிய பணி மேற்பார்வையாளர் மோகன் உள்பட பலர்கலந்துகொண்டனர்.
இந்தகூட்டத்தில் தங்கள் பகுதிகளில் நடக்கும் வளர்ச்சித்திட்டபணிகள் பற்றி
தெரிவிக்கவேண்டும் என்றும், ஒன்றிய கவுன்சிலர்களுக்கு அதிகாரிகளை
அறிமுகபடுத்தவேண்டும் என்றும், வளர்ச்சித்; திட்ட பணிகளுக்கு கூடுதல்நிதி
ஒதுக்ககோரிக்கை விடுக்கவேண்டும் என்றும், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு
உள்ளதுபோல் ஒன்றியக்குழு உறுப்பினர் களுக்கும் தனியாக அலுவலகம்
கட்டிடவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப் பட்டது.
முடிவில்,
துணைவட்டாரவளர்ச்சிஅலுவலர்(நிர்வாகம்)கிருஷ்ணவேணி நன்றிகூறினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: