கோயில் உண்டியலில் பணம் திருட்டு..

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு:

மதுரை

மதுரையில்
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மதுரை பழங்காநத்தம் புது அக்ரஹாரம் பகுதியில்
கோதண்டராமர் கோவில் உள்ளது. இந்தக் கோவில் மதுரை மாடக்குளம் மெயின்ரோடு சேர்ந்த முத்து மீனாட்சி சுந்தரம் என்பவர் நிர்வகித்து வருகிறார்.
வழக்கம் போல் இன்று காலை பூஜை செய்வதற்காக கோவிலை திறந்து பார்த்தபோது கோலின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. பார்த்த அவர் உடனடியாக மதுரை சுப்பிரமணியபுரம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த சுப்பிரமணியபுரம் காவல்துறையினர். சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்… முத்து மீனாட்சி சுந்தரம் கூறுகையில் உண்டியலில் இருந்த சுமார் 2000 ரூபாய் வரையிலும் கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் , மேலும் ஏதேனும் திருடு போய்விட்டதா என கோவிலை திறந்து பார்த்து பிறகு தான் தெரியவரும் எனவும் தெரிவித்தார். கோவிலில் கொள்ளை அடிக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: