முகக் கவசம் வழங்கி போலீஸார் விழிப்புணர் வு:

மதுரையில் போலீஸார் முகக் கவசம் வழங்கி விழிப்புணர்வு

மதுரை,

அம்மா உணவகத்தில் உணவு வாங்க காத்திருந்தவர்கள் அவகாசம் இல்லாமல் இருந்ததைக் கண்ட காவல் ஆய்வாளர் முககவசம் இலவசமாக வழங்கி கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொண்டார்…. மதுரை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சுப்ரமணியபுரம் காவல் சட்டம் ஒழுங்கு .ஆய்வாளர் கலைவாணி… ரோந்து சென்று கொண்டு இருந்தார் அப்போது மதுரை பழங்காநத்தம் அம்மா உணவகம் அருகே உணவு வாங்க காத்திருந்த முதியவர்கள் மற்றும் முதியவர்கள் பலர் முக கவசம் இல்லாமல் இருந்ததை பார்த்த அவர் உடனடியாக வாகனத்திலிருந்து இறங்கி ஒலிபெருக்கி மூலமாக.. முக கவசம் இல்லாமல் யாரும் வெளியே வரக் கூடாது எனவும். மீறி வருபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் எனவும் தெரிவித்தார் உடனடியாக அவர் அங்குள்ள முதியோர்களுக்கும் அவர் வைத்திருந்த . முக கவசம் அனைத்தையும் இலவசமாக வழங்கினார் மேலும் அங்குள்ள முதியவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலமாக வைரஸின் தீமை குறித்து விளக்கினார் அவர் மேற்கொண்ட பிரச்சாரத்தை பொது மக்கள் வரவேற்றனர் பொதுமக்கள் கூறுகையில் இனிமேல் நாங்கள் முக கவசம் அணியாமல் வெளியே வர மாட்டோம் எனவும் கட்டாயமாக முக கவசம் அணிந்து வெளியே வருவோம் எனவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் தொடர்ந்து காவல் ஆய்வாளர் செய்துவரும் பிரச்சாரம் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: