இராசபாளையத்தில் புரட்டாசி பொங்கல் விழா..

புரட்டாசி பொங்கல் விழா:

இராசபாளையம்

இராஜபாளையம் அருகே சோலைசேரி கிராமத்தில் புரட்டாசி பொங்கல் திருவிழா அரசு விதித்த கட்டுபாட்டுடன் வெகு விமர்சியாக நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சோலைசேரி கிராமத்தில் 200 ஆண்டுகள் மிக பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா ஆண்டு தோறும் விமர்சையாக பாட்டு காச்சேரி , கலை நிகழ்ச்சி என 8 -நாள் திருவிழா விமர்சையாக நடைபெறும்.

இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக கலை நிகழ்ச்சி இன்றி எளிய முறையில் கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் பூங்குழி திருவிழா துவங்கியது.
7-ம் நாள் திருநாளான இன்று ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ காளியம்மன் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சுவாமி வீதி உலா நடைபெற்றது

இதனை
த் தொடர்ந்து, பிரம்மாண்டமாக மூன்று அடி உயத்திற்கு பூ வளர்க்கப்பட்டதில் விரதமிருந்து பக்தர்கள் பூ இறங்கினர். விழாவுக்கான, ஏற்பாடுகளை
ஊர்த் தலைவர் ரவிக்குமார் செயலாளர் ராஜா தலைமையில் விமர்சையான ஏற்பாட்டில் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: