ஆன்லைன் வழியாக விவசாயிகள் குறைதீர்க்கு ம் கூட்டம்..

*மதுரையில் ஆன்லைன் வழியாக விவசாயிகள் மாதாந்திர குறை . தீர்ப்பு கூட்டம்*

*கலெக்டர் டி.ஜி.வினய் அறிவிப்பு*

மதுரை :

மதுரை மாவட்ட விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் விதமாக மாதந்தோறும் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடத்தப்படும், கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் 7 மாதமாக விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறவில்லை, இதனால் விவசாயிகள் தங்களுடைய குறைகள், கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் இருந்தனர், தற்போது விவசாய பணிகள் நடைபெறுவதால் மாதாந்திர விவசாய குறை தீர்ப்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில் மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் அக்டோபர் 13 ஆம் தேதி கூகுள் மீட் இணைய வழியே விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் என அறிவித்து உள்ளார், விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் அலுவலகத்தில் இருந்து இணைய வழியில் தங்களுடைய கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் அறிவித்து உள்ளார்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: