மதுரையில் பலத்த மழை

மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் போன்ற பகுதிகளில் பலத்த மழை :
.

மதுரை :

மதுரையில் இன்று காலை முதல் கடுமையாக வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில்
மதுரை நகர்ப் பகுதிகளான மாட்டுத்தாவணி, கே.புதூர், டி.ஆர்.ஓ. காலனி, தல்லாகுளம், கோரிப்பாளையம், கலெக்டர் அலுவலகம், அண்ணா நகர், கீழவாசல், தெற்கு வாசல், சிம்மக்கல், பெரியார் நிலையம், ஊமச்சிகுளம் போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
அதே போல,
திருப்பரங்குன்றம் தாலுகா பகுதியில் உள்ள வில்லாபுரம், அவனியாபுரம்,, பனையூர் ,,
பெருங்குடி, விமான நிலையம் பகுதியில் கடந்த அரை மணி நேரமாக பலத்த மழை பெய்தது.

இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த இரண்டு நாட்களாக நூற்றி ஒரு டிகிரிக்கு !மேல் வெயில் அடித்து வந்த நிலையில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை மழையால் வெப்பம் தணிந்தது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: