புதிய தமிழகம் கட்சியினர் உண்ணாவிரதம்..

பட்டியல் பிரிவில் இருந்து நீக்கக்கோரி சோழவந்தான் பகுதிகளில் புதிய தமிழகம் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்

பட்டியல் பிரிவில் இருந்து நீக்கி தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்திபுதிய தமிழகம் கட்சியினர் சோழவந்தான் அருகே நகரி உள்ளிட்ட பல இடங்களில் உண்ணாவிரதம் இருந்தனர் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நகர் கிராமத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பாக உண்ணாவிரதம் இருந்தனர் உண்ணாவிரதத்திற்கு முன்னாள் மாவட்ட செயலாளர் இளம்பிறை சேதுராமன் தலைமை தாங்கினார் ஒன்றிய செயலாளர் சுரேஷ் ஒன்றிய நிர்வாகி மலைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் மகளிரணி சுதா லக்ஷ்மி இளைஞரணி திருப்பதி காசிநாதன் ஆகியோர் பேசினார்கள் இதில் குழந்தைகள் பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: