ஏழைமாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்..

நியாய விலைக்கடைகளில் ஏழை எளிய பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பயன்படுத்த ஸ்மார்ட் போன் வழங்க வேண்டும் என்று மதுரையில் நாடார் முன்னேற்ற சங்க சார்பில் கோரிக்கை

மதுரை மாட்டுத்தாவணி பி.டி.ஆர் ஜான் ஹோட்டலில், நாடார்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், எதிர்வரும் நாடார் மகாஜன சங்கம் மற்றும் கல்வி நிறுவனங்களின் தேர்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம், சங்கத்தின் பொதுச் செயலாளர் பெரீஸ் மகேந்திரவேல் தலைமையில், துணை தலைவர் மதுரை பி.டி.ஆர் குழுமங்களின் நிறுவனத் தலைவர் பி.டேனியல் தங்கராஜ் முன்னிலையில் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர் பெரீஸ் மகேந்திரவேல் விரைவில் நடைபெறவிருக்கும் நாடார் மகாஜன சங்கம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான தேர்தலில் பங்கேற்பதுடன் வெற்றி பெறவும் செயல்படுத்த வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கமாக பேசினார். மேலும் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. மதுரையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாநிலம் அறிவிக்க வேண்டும். தமிழக முதல்வர் ஏற்கனவே எங்களது கோரிக்கையை ஏற்று நியாய விலைக் கடைகளில் முகக்கவசம் வழங்கியதைப் போல, ஏழை,எளிய பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பயன்படுத்த ஸ்மார்ட்போன் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் துணைப் பொதுச்செயலாளர் ராமையா, பொருளாளர் ஜோசப் வாசுதேவன்,பாலகுரு, முனிராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: