விவசாயத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட் டது..

வடகரை கண்மாயில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது விவசாயிகள் மகிழ்ச்சி

சோழவந்தான் வடகரை கண்மாய் சுமார் 800 ஏக்கர் பரப்பளவு கொண்டது கண்மாயில் இருந்து சுமார் 1,200 ஏக்கர் விவசாயம் நடந்து வருகிறது தற்போது உள்ள கண்மாய்க்கு நீர் வரக்கூடிய வழித்தடங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புகளால் அடைபட்டு உள்ளது ஆகையால் கண்மாய்க்கு வரக்கூடிய நீர்வரத்து குறைந்துள்ளது குறித்து ஓடையில் தடுப்பணை கட்டி உள்ளதால் வரக்கூடிய தண்ணீரும் வரவில்லை இது குறித்து இப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் தண்ணீர் திறக்க கோரி மாவட்ட நிர்வாகத்திடம் சென்ற வாரம் கோரிக்கை வைத்திருந்தனர்விவசாயிகள் கோரிக்கையை ஏற்று பொதுப்பணித்துறையினர் இன்று கண்மாயில் தண்ணீர் திறந்துவிட ஏற்பாடு செய்திருந்தனர் இங்குள்ள விவசாயிகள் முன்னிலையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது இதுகுறித்து நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் அண்ணாதுரை கூறும்போது கண்மாய் இரண்டு போகம் விளைச்சல் செய்யக்கூடிய அளவு தண்ணீர் தேக்கிவைக்க கூடிய பெரிய கண்மாய் மாவட்டத்திலே பெரிய கண்மாயில் இது ஒன்று சில ஆண்டுகளாக துருத்தி ஓடையில் இருந்து தண்ணீர் வரத்து குறைந்து உள்ளது இதற்கு காரணம் கண்மாயில் தண்ணீர் வரக்கூடிய பகுதிகளில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது மேலும் கண்மாய்க்கு வரக்கூடிய பகுதிகளில் தடுப்பணை ஒன்று அப்பகுதி விவசாயிகள் அரசு அதிகாரிகளை எதிர்த்து கட்டியுள்ளனர் இதனால் இப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு போதுமான தண்ணீர் தேக்கி வைக்க முடியவில்லை இதனால் காலப்போக்கில் இப்பகுதி விவசாயம் ஒரு பாகமாக மாறிவருகிறது ஆகையால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்மாய் ஆக்கிரமிப்பு எடுத்து துருத்தி ஓடையில் உள்ள தடுப்பணை அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் விவசாயி சுசீந்திரன் கூறும்போது எங்கள் விவசாயிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம் இந்த கண்மாயில் இருந்து சுமார் 1,700 ஏக்கர் விவசாயம் செய்து வருகிறோம் இங்கு கண்மாயில் நீர் தேக்க முடியாத அவலநிலை அதிகாரிகளின் கவனக்குறைவால் நடந்து வருகிறது இங்கே விவசாயிகளுக்கு நடந்து செல்ல பாதையே கிடையாது கண்மாய் கரையில் தான் நடந்து செல்கிறார்கள் இந்த கண்மாய் கரையில் முறையாக ரோடு போட வேண்டும் விவசாயம் முடிந்த பிறகு மடைகளை முழுமையாக சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: