படம்

வாடிப்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் சென்ற திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு :

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கார் உரிமையாளர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு:

மதுரை

மதுரை மாவட்டம் கூடல்நகர் பகுதியை சேர்ந்த ரகுராமன்
தனது
சொகுசு காரில் மதுரையிலிருந்து கோயம்புத்தூருக்கு பணி நிமித்தமாக மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை தனது சொகுசு காரில் சென்றார்.
மதுரை வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் பகுதியில் சென்ற போது, காரிலிருந்து கரும்புகை வெளியேறுவதை கண்ட கார் உரிமையாளர் ரகுராமன் காரை நிறுத்தி கீழே இறங்கிய போது காரில் தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது.
உடனடியாக தீ விபத்து குறித்து வாடிப்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக வாடிப்பட்டி தீயணைப்பு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் பற்றிய தீயை தண்ணீர் பீய்ச்சி அணைத்தனர்.
தக்க நேரத்தில் ,காரை நிறுத்தி கீழே இறங்கி தீ விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக கார் உரிமையாளர் ரகுராமன் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: