பொது சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த ஆர்ப ்பாட்டம்

கொரோனா பரிசோதனைகளை துரிதபடுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்.

மதுரை, ஜூலை. 22-

மதுரை மாநகர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் அனைத்து அரசு மருத்துவமனை , ஆரம்ப சுகாதார நிலையங்கள் முன்பு

மத்திய – மாநில அரசுகள் பொது சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். கொரோனா சிகிச்சை மையங்களை வட்டார அளவில் அதிகப்படுத்தி பரிசோதனை முடிவுகளை விரைவில் தெரியப்படுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசு கொடுத்த வாக்குறுதிப்படி சுகாதார ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ஒரு மாத சம்பளம் வழங்கிட வேண்டும். கொரோனா சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு தரமான உணவு , வெந்நீர் முறையாக வழங்க வேண்டும். மருத்துவர்கள் , செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். புதிதாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரசவம் மற்றும் பொது மருத்துவத்திற்கு வரும் நோயாளிகளுக்கு கொரோனா சிகிச்சையினை காரணம் காட்டி மறுக்காதே என்று சுகாதாரத்தை பாதுகாக்க கோரி மதுரை மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையம் மற்றும் மாதர் ஊழியர்கள் வீடு முன் வியாழனன்று ஆர்ப்பாட்டம் மேலப்பொன்னகரம், நடைபெற்றது பொன்னகரம் பிராட்வே மணல்மேடு ஆரம்ப சுகாதார மையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் நாகஜோதி தலைமையில் நடைபெற்றது இதில் பகுதிகுழு உறுப்பினர் ஜென்னி மற்றும் செல்லூர், முனிச்சாலை, தெற்கு வாசல், மீனாட்சிபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர் சசிகலா முன்னால் மாமன்ற உறுப்பினர்கள் பழனியம்மாள் செல்லம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: