கால்வாயில் தொழிலாளி சடலமாக மீட்பு..

கால்வாயில் அடித்து சென்ற தொழிலாளி சடலமாக மீட்பு:

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கால்வாயில் வந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை மீட்டனர்.
இது பற்றி கூறப்படுதாவது:
திண்டுக்கல் மருதாங்குளத்தைச் சேர்ந்தவர்
தங்கபாண்டியன் வயது 39. இவர் அதே ஊரில் டீக்கடை நடத்தி வந்தாராம்.
இவர், நிலக்கோட்டை அருகேயுள்ள மட்டப்பாறைக்கு உறவினர் வீட்டுக்கு வந்தவர், அப் பகுதியில் உள்ள பெரியாறு பிரதானக் கால்வாய்க்கு குளிக்க சென்றுள்ளார்.
அப்போது, எதிர்பாரதவிதமாக கால்வாய் நீரானது இவரை தண்ணீரில் இழுத்து சென்றுவிட்டது.
இந்த நிலையில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அழகாபுரி பெரியாறு பிரதானக் கால்வாயில் அலங்காநல்லூர்
போலீஸார் தங்கப் பாண்டியனை சடலமாக மீட்டு, மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: