புரட்டாசி சனிவார விழா

சோழவந்தான் பகுதிகளில் புரட்டாசி 3-வது வாரம் பெருமாள் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

சோழவந்தான் அருகே உள்ள அணைப்பட்டி கிராமத்தில் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது புரட்டாசி 3வது சனி வாரத்தை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது முரளீதரன் அர்ச்சகர் பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார் இங்கே பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அம்மனை தரிசித்து அருள் பெற்றுச் சென்றனர் குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு ரகுராமன் பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார் இங்கே பெருமாளை நோக்கி இருக்கும் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனை நடந்தது ஸ்ரீ பாலாஜி பட்டர் பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார் விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சுரேஷ் கண்ணன் ஆலய பணியாளர்கள் வெங்கடேசன் கிருஷ்ணன் நாகராஜன் மணி ஆகியோர் செய்திருந்தனர் இங்கே மதுரை விருதுநகர் தேனி உள்பட அருகில் உள்ள மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து பெருமாளை குருபகவானை தரிசித்து அருள் பெற்றனர் சோழவந்தான் ஜெனகை நாராயணபெருமாள் கோவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஜனகன் நாராயணனுக்கு இருபத்தொரு அபிஷேகங்கள் நடந்தது ரகு ராமர் பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார் விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சத்யநாராயணன் ஆலய பணியாளர் பூபதி வசந்த் ஆகியோர் செய்திருந்தனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: