Connect with us

LatestNews

கஞ்சா காரில் கடத்திய 5 பேர் கைது..

Published

on

கஞ்சா கடத்திய 5 பேர் அதிரடி கைது:

மதுரை

மதுரை ஆரப்பாளையம் அம்மா பாலம் ரவுண்டானா அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

சந்தேகம் அளிக்கும் வகையில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது அதில் சோதனை செய்தபோது, அந்த…. காரில் கஞ்சா இருந்தது தெரியவந்தது . அதை கொண்டு வந்த 5 பேரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை செய்ததில் ,மதுரையை சேர்ந்த ரவி, தினேஷ் குமார், பிரவீன் குமார். தேனியை சேர்ந்த பெரிய கருப்பன், கண்ணன் காரில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, 5 பேர் கைது செய்த சுமார் 35 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது குறித்து
கரிமேடு போலீசார் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

அரசு சார்பில் கொரோனா நிதி…

Published

on

திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரு நியாய விலை கடையில்தமிழக அரசின் சார்பில் கொரோனா நிவாரண நிதியை கோ.தளபதி எம்.எல்.ஏ.வழங்கியபோது எடுத்த படம். அருகில் தி.மு.க. பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டி, துணை செயலாளர் எம்.ஆர்.பி.ஆறுமுகம் உள்பட பலர் உள்ளனர்

Continue Reading

LatestNews

வெளி மாநிலங்களிலிருந்து ஆக்சிஜன்..அமைச்ச ர்

Published

on

துபாய், சிங்கப்பூர், டெல்லி, ஒடிசா மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்ய திட்டமிட்டு வருகிறோம் -நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரையில் பேட்டி*

மதுரையில் கொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவ மையம் திறப்பு:

மதுரை

மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மருத்துவமனை, சிகிச்சை மையங்களின் நிலை குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பாலை பகுதியில் உள்ள யாதவா மகளிர் கல்லூரியில் 108 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ள சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை திறந்து வைத்து ஆய்வு செய்தனர்.
அப்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் பூமிநாதன், வெங்கடேஷ் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன், ஆட்சியர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த
வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி பேசுகையில்,
மதுரையில் முதல் சித்தா சிகிச்சை மையம் துவங்கப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது. போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விரைவில் மதுரையில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றார்.
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில்,
மதுரையில் மிகவும் இக்கட்டான சூழல் உள்ளது.
கடந்த ஆண்டை விட இந்தாண்டு பாதிப்பு அளவு அதிகமாக உள்ளது.
அரசு உருவாகி ஒரு வாரம் கூட ஆகவில்லை என்றாலும் மிக விரைவாக செயல்பட்டு வருகிறோம்.
அரசு மருத்துவமனை அனைத்தும் நிரம்பி விட்டது.
எனவே, ஒய்வு பெற்ற மருத்துவர்கள், இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்கள், வெளிநாட்டு மருத்துவர்கள் ஆகியோரை இங்கு சிகிச்சை பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
துபாய், சிங்கப்பூர், டெல்லி, ஒடிசா மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்ய திட்டமிட்டு வருகிறோம்.
மக்கள் அவர்களின் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால் மட்டுமே கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
தேர்தல் காலத்தில் ஒரு நாள் கூட நான் மாஸ்க் இல்லாமல் வெளியே சென்றதில்லை.
அரசு எவ்வளவு முயன்றாலும்,
மக்கள் உதவினால் மட்டுமே இதை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
ஆக்சிஜன் படுக்கைகள், மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது.
ஓரிரு நாளைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கும். ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் விரைவில் கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டு உள்ள கட்டளை மையத்தை ஆய்வு செய்தனர்.
பின்னர், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், பிரதிநிதிகள் உடன் ஆலோசனை செய்து வருகின்றனர்.

Continue Reading

LatestNews

கொரோனா நிவாரண நிதி வழங்குதல்

Published

on

திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் நியாய விலை கடையில் தமிழக அரசின் சார்பில் கொரோனா நிவாரண நிதியை கூத்தியார்குண்டு கூட்டுறவு சங்கத் தலைவர் நிலையூர் முருகன் வழங்கியபோது எடுத்த படம்

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

நெகடிவ்.. ஆனா பாசிட்டிவ்..  வெளியே போனா ஆபத்து!

இரண்டாம் அலையில், யாரிடம் தொற்று இருக்கும் என்று, யாருக்கும் தெரியாது. நெகடிவ்.. ஆனா பாசிட்டிவ்.. வெளியே போனா ஆபத்து! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

தரக்குறைவாய் மெஸேஜ் அனுப்பிய நபர்! காட்டமான சௌந்தர்யா!

இப்படியான மெசேஜ்களை அனுப்புபவர்களுக்கு அவ்வளவு தைரியம் இருக்கும் பொழுது, அவ்வளவு துணிச்சல் இருக்கும் பொழுது, இதைப் பற்றி பேசி சமூக வலைதலங்களில் கருத்துக்களை நீங்களும் தயங்காமல் பதிவிட… [...]

கொரோனா: தயாரிப்பாளர் கலைச்செல்வன் மரணம்

தீவிர சிகிச்சையில் இருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். கொரோனா: தயாரிப்பாளர் கலைச்செல்வன் மரணம் முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

கெல்லீஸ் முதல் தரமணி வரை.. மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை: எல் அண்ட் டி நிறுவனம் தேர்வு!

அடுத்த 36 மாதங்களில் முடிக்க உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கெல்லீஸ் முதல் தரமணி வரை.. மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை: எல் அண்ட் டி நிறுவனம் தேர்வு!… [...]

உலகின் தலைசிறந்த தர்மம்!

நாய் ஒன்று அவர் எதிரில் எலும்பும் தோலுமாக வந்து நின்றது. உலகின் தலைசிறந்த தர்மம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: