மின்வயர் அறுந்து போக்குவரத்து பாதிப்பு..

அதிகம் பாரம் ஏற்றி வந்த லாரியால் மின் வயர் அறுந்து விழுந்தது போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதி:

சோழவந்தான்

மதுரை சோழவந்தான் வேப்பமர ஸ்டாப் அருகே இரவு அதிகமாக தேங்காய் ஏற்றி வந்த லாரி ரோட்டின் குறுக்கே சென்ற மின்சார வயர் மீது மோதி நின்றது. இதனால், மின்சார வயர்கள் அறுந்து விழுந்தது. இதனால் மின்சாரம் தடை ஏற்பட்டதால் இப்பகுதி ஒரு மணி நேரம் இருளில் மூழ்கியது .
மற்றும் அந்த வழியாக சென்ற வாகனங்கள் நின்றதால், போக்குவரத்து ஸ்தம்பித்தது .
மின்சார வாரிய பணியாளர்கள் மற்றும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து மின் வயரை சரி செய்து மின் இணைப்பைக்
கொடுத்தனர். போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.
இதனால், சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளானார்கள்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: