காந்தி சிலையிடம் மனு அளித்த மக்கள் நீதி மையத்தினர்…

புதுகையில் மக்கள்நீதிமைய
மையத்தினர் மனு அளிப்பு.
புதுக்கோட்டை:கிராமத்தின் சுயாட்சியை நிலைநாட்டும் கிராமசபையை அரசியல் சுயலாபத்திற்க்காகவும் மக்களின் கேள்விகளுக்கு அஞ்சியும் நிறுத்தி வைத்த இந்த அரசுகளிடம் இருந்து மக்களுக்கான சுதந்திரத்தை மீட்டுதருமாறு அஹிம்சையின் அடையாளமாக இருக்கும் காந்தி சிலைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுக்கோட்டை மத்திய மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் மனு அளித்தனர்.
இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் சுந்தர், திருமேனி மற்றும் நகரசெயலாளர் ராஜகோபால் விவசாய அணி மூர்த்தி வழக்கறிஞர் சுரேஷ்குமார் உள்ளிட்ட மாநில, நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: