காந்தி ஜயந்தி மற்றும் காமராஜர் நினைவு தி னம்..

தனிச்சியத்தில் காந்தி ஜயந்தி விழா மற்றும் காமராஜர் நினைவு தினம்: காங்கிரஸ் கட்சி ஏற்பாடு

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் தனிச்சியம் கிராமத்தில், வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில், காந்தி ஜயந்தி மற்றும் காமராஜர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு, அலங்காநல்லூர் வட்டார காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், ஒன்றியக் கவுன்சிலர் சுப்பாராயலு தலைமை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.
சோழவந்தான் தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் மோகன், காந்தி மற்றும் காமராஜர் படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.
காங்கிரஸ் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த சோணைமுத்து, காங்கிரஸை சேர்ந்த பிச்சை, நாராயணன், ராமர், ராமச்சந்திரன், ஆலடி, ஆறுமுகம் உள்ளிட்டோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: