பலசரக்கு கடையில் திருட்டு: ஒருவர் கைது

பல சரக்கு கடையை உடைத்து திருடியவர் கைது

அலங்காநல்லூர் ஜீலை 23

மதுரை மாவட்டம்
பாலமேடு நாயுடு தெருவில் அதிகாலை நேரத்தில் சாக்கு மூட்டையை தூக்கி கொண்டு சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து சென்றுள்ளார். அப்போதுஅந்த நேரத்தில்ரோந்து சென்ற
சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் அந்த நபரை நிறுத்தி விசாரித்து உள்ளார். அவர் எடுத்து சென்ற சாக்கு பையில்
உள்ள பொருள்கள் குறித்து விசாரித்த போது முன் பின் முரனாக பதில் அளித்துள்ளார். தொடர்ந்து நடந்த விசாரனையில் அந்த நபர் பாலமேட்டை ராஜசேகர் வயது 40. எனபது தெரிய வந்தது. இவர் நாயுடுதெருவிலுள்ள பலசரக்கு கடையின் பக்கவாட்டு பிளைவுட் பலகையைஉடைத்து உள்ளே நுழைந்து அங்கு இருந்த ரூ.-2380 மற்றும் சில்லறை காசுகள்-2470 மொத்தம்-4850 ரூபாய் பணத்தையும், 18 வகையான மளிகைப் பொருட்கள் திருடியதை ஒப்புக் கொண்டார். மேலும்
விசாரணை நட்த்தி ராஜசேகர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். தொடரும் ஊரடங்கு மற்றும் வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால் வழிப்பறி. வீடு புகுந்து திருடுதல். கடைகளை உடைத்து உணவு பொருள்களை கொள்ளை அடிக்கும் சம்பவம் அதிகரித்து வருவதாக காவல்துறை வட்டாரம் தெரிவித்தது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: