நிவாரணத் தொகை அளித்த முதியவருக்கு அமைச் சர் மரியாதை..

நிவாரணத் தொகை அளித்தவரை பெருமைப்படுத்திய அமைச்சர்

மதுரை

கொரோனா நிவாரண நிதியாக யாசகம் பெற்ற பணத்தை அளித்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பூல்பாண்டியனை, தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் பாராட்டி சால்வை அணிவித்தார்.
முதியவர் பூல்பாண்டியன், மதுரை மாட்டுத் தாவணி பகுதியில் யாசகம் பெற்று இதுவரை 15 தடவையாக ரூ. 10 ஆயிரம் பணத்தை கொரோனா நிவாரண நிதியாக, மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் டி.ஜி. வினய் யிடம் அளித்துள்ளார்.
இவரை, அண்மையில் மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் பாராட்டி சான்றிதழ் அளித்த நிலையில், தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாணிக்கம், சரவணன் மற்றும் அரசு அதிகாரிகள் பூல் பாண்டியின் கொடத் தன்மையை பாராட்டி சால்வை அணிவித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: