LatestNews
பட்டாசுகள் ஏற்றுமதிக்கு கப்பல் கட்டணத்த ை குறைக்க எம்.பி. கோரிக்கை..

சிவகாசி பட்டாசுகள் ஏற்றுமதி செய்வதற்கு கப்பல் சரக்கு கட்டணத்தை குறைக்க வேண்டும்….
விருதுநகர் எம்.பி மாணிக்கம்தாகூர் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்……
சிவகாசி :
விருதுநகர் மாவட்டத்தின் பிரதான முக்கியத் தொழிலாகவும், மத்திய மாநில அரசுகளுக்கு வரிகள் மூலம் பெரும் வருமானம் வழங்கும் தொழிலாகவும், சிவகாசி பட்டாசு தயாரிக்கும் தொழில் நடந்து வருகிறது. பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை என இதில் நேரிடையாக 10 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். இந்தியா முழுவதும் சிவகாசியில் தயாராகும் பட்டாசுகள் விற்பனையாகி வருகிறது. சிவகாசி பட்டாசுகள் தரம் உயர்வாக இருப்பதால் வெளிநாடுகளுக்கும், கப்பல்கள் வழியாக அனுப்பப்பட்டு வந்தன. காலப்போக்கில் கப்பலில் பட்டாசுகள் அனுப்பும் செலவுகள் அதிகமானதால், விலை உயர்வு ஏற்பட்டு, ஏற்றுமதி வாய்ப்புகள் நின்று போனது. உலக பட்டாசு மார்க்கெட்டில் சீனப் பட்டாசுகள் முதலிடத்தில் இருக்கின்றது. இன்றைய வைரஸ் தொற்று பரவல் காரணமாக, சீனவின் ஏற்றுமதி தொழில் சரிவை சந்தித்துள்ளது. இந்த சூழ்நிலையை இந்தியா சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர், மத்திய கப்பல் துறை அமைச்சர் மண்சுக் மாண்ட்வியாவை நேரில் சந்தித்து, சிவகாசி பட்டாசுகளை கப்பல் வழியாக ஏற்றுமதி செய்வதற்கு உரிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தினார். வெளி நாடுகளுக்கு பட்டாசுகள் ஏற்றுமதி செய்யும் சூழல் நன்றாக உள்ளது. இந்த வாய்ப்பை இந்தியா பயன் படுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவிலிருந்து கப்பல்கள் மூலம் பட்டாசுகள் அனுப்பும் செலவுகள், பட்டாசு உற்பத்தி விலையை விட, கப்பல் சரக்கு கட்டணம் அதிகமாக உள்ளது. இதனால் வெளிநாட்டுச் சந்தைகளுக்கு பட்டாசுகளை அனுப்ப முடியாத நிலை உள்ளது.
மற்ற பொருட்களுக்கு வாங்கப்படும் சரக்கு கட்டணத்தை போலவே, பட்டாசுகள் அனுப்புவதற்கும் வசூலித்தால், பட்டாசு ஏற்றுமதி நன்றாக இருக்கும். வெளிநாடுகளுக்கு அனுப்பும் மற்ற பொருட்களுக்கு வாங்கும் சரக்கு கட்டணத்தை போலவே, பட்டாசுகள் அனுப்புவதற்கான சரக்கு கட்டணத்தையும் குறைக்க வேண்டும். இதனால் சிவகாசி பட்டாசுத் தொழில் இன்னும் வளர்ச்சி பெறும். மேலும் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பும் நிரந்தரமாக கிடைக்கும், மேலும் மத்திய மாநில அரசுகளுக்கு வரி வருமானமும் அதிகரிக்கும் என்று மத்திய கப்பல் துறை அமைச்சரிடம், எம்.பி மாணிக்கம்தாகூர் வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கினார். மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று, மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
LatestNews
சகதியில் சிக்கி தவித்த மாடு மீட்பு…

வடுகபட்டியில்
சேறுசகதியில்சிக்கிதவித்த
பசுமாடு மீட்பு:
வாடிப்பட்டி,மார்ச்:4.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடுகபட்டி முத்தாலம்மன்கோவில்தெருவை
சேர்ந்தவர் பெரியகருப்பன் மகன் பவுன் பாண்டியன்(35)விவசாயி. இவர் பசுமாடு
வளர்த்துவருகிறார் அந்த மாடு தற்போது சினைபிடித்துள்ளது. இந்நிலையில்
நேற்று காலை 10மணிக்கு வடுகபட்டி அரிசிஆலை எதிரில் உள்ள
பெரியாறுபாசனகால்வாய் ஓடையில் மாட்டினை குளிப்பாட்டிக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சேரும்சகதியும்நிறைந்த புதைகுழிக்குள் மாடு
சிக்கிக்கொண்டது. உடனே அதை மீட்கமுயற்சித்தார் அவரால் முடியவில்லை. அந்த
புதைகுழியில் மாட்டின் கால்முழுவதும் உள்ளே இழுத்துக்கொண்டது இதனால், மாடு
எழமுடியாமல் அவதியடைந்தது.
இது சம்மந்தமாக தகவலறிந்த, வாடிப்பட்டி
தீயணைப்பு நிலைய அதிகாரி சதகத்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள்
1மணிநேரம் போராடி புதைகுழிக்குள் சிக்கியிருந்த சினைமாட்டினை மீட்டனர்.
LatestNews
போலீஸ் கொடி அணிவகுப்பு…

திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள அவனியாபுரம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொடி அணிவகுப்பு பேரணி :
மதுரை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி மேல்நிலைப் பள்ளியில் இருந்து கொடி அணிவகுப்பு புறப்பட்டு அவனியாபுரம் பேருந்து நிலையம் கணக்குப்பிள்ளை தெரு பெரியார் நகர் இம்மானுவேல் நகர் பிரசன்னா காலனி வழியாக அவனியாபுரம் சிஎஸ் நகரில் பேரணி முடிவு பெற்றது.
இதில் , மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் துணை கமாண்டன்ட் ஜிந்தா தலைமையில் 75 வீரர்களும் , திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர் சிவராஜ் பிள்ளை மற்றும் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பெத்துராஜ், சார்பு ஆய்வாளர் தண்டீஸ்வரர், தமிழ்ச்செல்வம் அடங்கிய போலீசார் கொடி அணிவகுப்பு பேரணியில் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய சிறப்பு காவல் படை வீரர்கள் அணி வகுப்பை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
LatestNews
வாக்கு மையங்கள் ஆய்வு…

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தேர்தல் வாக்கு மையங்கள் ஆய்வு:
சோழவந்தான்
வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் மற்றும் தென்கரை வருவாய் உட் கோட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள வாக்குச் சாவடி மையங்களை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். இதில், வாடிப்பட்டி தாசில்தார் பழனி குமார் தலைமை நில அளவையாளர் செந்தில் தேர்தல் துணை வட்டாட்சியர் இசக்கிமுத்து வருவாய் ஆய்வாளர்கள் அழகுகுமார் ராஜன் கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயப்பிரகாஷ் முத்துக்குமரன் மணிவேல் சூசைஞானசேகரன் முபரக் சுல்தான் பழனி வெங்கடேசன் கார்த்திக் செல்வமணி சுரேஷ் கார்த்திஸ்வரி முத்துராமலிங்கம் பாண்டி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர் .
மொத்த வாக்காளர்கள் 2180 87 இதில், ஆண்கள் வாக்காளர்கள் 107097 பெண் வாக்காளர்கள் 110 363 மற்றவர்கள் 10 மொத்த வாக்கு மையம் 126 உள்ளன இதில் 70 மையங்களை பார்வையிட்டனர் கட்டட தன்மை கழிப்பறை வசதி மின்வசதி காற்றோட்ட வசதி உட்பட அடிப்படை வசதிகள் எவ்வாறு உள்ளன என்று ஆய்வு செய்தனர்