புதுகையில் ரத்த தான முகாம்..

புதுகைஅரசு மருத்துவ கல்லூரியில் தேசிய இரத்ததானதினம்

புதுக்கோட்டை:புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கியில் தேசிய இரத்ததானதினம் கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி சிறப்பு இரத்ததான முகாம் மற்றும் தன்னார்வ இரத்த கொடையாளர்களை சிறப்பிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.பூவதி வழங்கினார்.அப்போதுபேசுகையில் இரத்ததானத்தின் அவசியம் பற்றியும், இக்கொரோனா காலத்தில் இரத்தானத்தின் முக்கியதுவம் பற்றியும், இரத்ததானம் மூலம் கொடையாளர்களுக்கு ஏற்படும் நன்மைகளையும் கூறினார். மேலும், இந்த கொரோனா காலத்தில் தக்க சமயத்தில் தாமாகவே முன்வந்து இரத்ததானம் செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இவ்விழாவில் மருத்துவக் கண்காணிப்பாளர் மரு. ராஜ்மோகன்,துணை முதல்வர்
மரு. கலையரசி , நிலைய மருத்துவர் இந்திராணி, துறைத் தலைவர் மரு.ஜானகி, மாவட்ட இரத்தமாற்று அலுவலர் மரு.அழகம்மை ஆகியோர் பங்கேற்றனர்.
மரக்கன்றுகள்நடும்விழா:இவ்விழாவினை முன்னிட்டு மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் கல்லூரி முதல்வர் தலைமையில் நடப்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: