அதிமுகவில் வரும் 7-ம் தேதி முதல்வர் வேட்பா ளர் அறிவிக்க வாய்ப்பில்லை..பாஜக நிர்வாகி

அதிமுகவில் வரும் 7ம் தேதி முதல்வர் வேட்பாளர் பெயரை அறிவிக்க வாய்ப்பு இல்லை…..
பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி……

சிவகாசி :

விருதுநகர் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. பாஜக கட்சியின் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி முடிந்தபின் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக கட்சியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது 7ம் தேதி அறிவிக்க வாய்ப்பு இல்லை, மேலும் சில காலம் தள்ளிப்போகும் வாய்ப்பு தான் உள்ளது. அதிமுகவில் யாரை முதல்வர் வேட்பாளாராக அறிவித்தாலும் பாஜக அதிமுக கூட்டணி தொடரும், இந்தக் கூட்டணி தான் வெற்றி பெறும்.
மத்திய அரசு அமைத்துள்ள கலாச்சார ஆய்வுக்குழுவில் தமிழர்கள் இடம் பெற வேண்டும் என்ற கருத்தை வரவேற்கிறேன், பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியலில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் பதவி வழங்கி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். அடுத்த நிர்வாகி பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண்மைச் சட்டத்தை வைத்துக் கொண்டு திமுக கட்சி அரசியல் செய்கிறது
என்று நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: