LatestNews
சாலைகள் அமைக்க பூமி பூஜை..

இராஜபாளையத்தில் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக சாலைகள் அமைக்க பூமி பூஜையுடன் பணிகளை பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம்
இராஜபாளையம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் ,ரயில்வே மேம்பால பணிகள் என பல்வேறு பணிகள் இந்த பகுதியில் நடந்து வருவதால் சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் மேடுகளாக இருப்பதால் விபத்துக்கள் அதிகரித்து வந்த நிலையில் இன்று பால்வளத் துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பூமி பூஜை போட்டு புதிய சாலை அமைக்கும் பணிகளை துவங்கி வைத்தார் உடன் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா , நகர செயலாளர் பாஸ்கர், நகர அம்மா பேரவை வாக்கில் முருகேசன் கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றார்
அதன்பின் செய்தியாளர்களை சந்திப்பின் போது,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் ரயில்வே மேம்பால திட்டம், பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல பணிகள் பல கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மக்கள் நலன் கருதி அதிமுக அரசினால் கொண்டுவரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது
எதிர்காலத்தில் மக்கள் குடிநீர் பிரச்சினை தீரும், சுகாதாரமான வாறுகால் வசதி கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் தோண்டப்பட்ட சாலைகள் புதிதாக அமைக்க தற்போது 24 கோடி ரூபாய் செலவில் முக்கிய சாலைகள் பணி துவங்கி உள்ளது
மேலும் பல பகுதிகளில் சாலை பணிகளை விரைவில் 40 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அதிமுக அரசு துவங்க உள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.
திமுகவில் ஆ.ராசா தொண்டர்களை தரக்குறைவாக பொதுவெளியில் நாயே என திட்டியது குறித்து நிருபர்கள் கேட்டபோது, இது திமுகவின் கலாச்சாரமாக தொடர்கிறது . ராஜா வாழ்க என கத்தியதிற்க்கு தரகுறைவாக வசைபாடியதால் அவரின் மனநிலை என்னவோ?என விமர்சித்தார்.
LatestNews
கிராம மக்கள் முற்றுகை போராட்டம்..

ஆட்சியர் அலுவலக முன்பு முற்றுகை போராட்டம்:
மதுரை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட
கொம்பாரி கிராம ஊராட்சியில் உள்ள கீழக் கண்மாய் மற்றும் மேலக் கண்மாய்களுக்கு நிலையூர் – கம்பிகுடி கால்வாயிலிருந்து தொட்டியபட்டி பிரிவிலுள்ள நெடுமதுரை கடல் வழியாக மேற்சொன்ன கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க ஆவணம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தும் , தண்ணீர் திறந்து விடக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்த திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆசிக்கை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே அவரை மீண்டும் பணியிலமர்த்தக் கோரியும் கொம்பாரி
ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில்
கொம்பாரி ஊர் பொதுமக்கள் சுமார் 450 பேர் தங்களது குடும்ப அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக கூறி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுக்கை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.கி
LatestNews
திடீரென வீடு இடிந்து விழுந்தது…

மதுரை தெற்கு வாசல் மீனாட்சி டாக்கீஸ் அருகே வீடு ஒன்று திடீரென இடிந்தது.
தகவல் கிடைத்ததும், மதுரை தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.
LatestNews
ஜெயலலிதா கோயில் கும்பாபிஷேகம்..

ஜெ.கோயில் கும்பாபிசேகத்திற்கு கிராமம் கிராமாக அமைச்சர் உதயகுமார் அழைப்பு
திருமங்கலம் :
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில்ஜெ.பேரவை சார்பில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் அம்மா கோயில் என்ற பெயரில் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ.க்கு கோயில் கட்டப்படுகிறது. இதில் இருவருக்கும் 8 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், ஜன.30 ல் கும்பாபிசேகம் நடக்க உள்ளது.
இந்த கும்பாபிசேகத்திற்கு முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்காக திருமங்கலம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அமைச்சர் உதயகுமார் நேரில் சென்று கும்பாபிசேகத்தில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.