தரமற்ற அரிசி விநியோகம்?

*அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் அரிசி தரமற்ற நிலையில் இருப்பதாக பெற்றோர் வேதனை*

அரசு பள்ளி மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் உடன் சேர்த்து மாதம் ஒன்றுக்கு மாணவர்களுக்கு தலா 10 முட்டைகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த முறையே கடந்த செப்1 ஆம் தேதியில் இருந்து வழங்கப்பட்டு வந்தநிலையில், தற்போது மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள அரசுமேல்நிலை பள்ளியில் தரமற்ற அரிசி அதிகமாக வண்டுகள் உள்ளதால் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது.

அரசு உடனே கவனத்தில் கொண்டு உரிய நடைவெடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: