படங்கள்…

சோழவந்தான் அரசஞ் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மது பிரியர்கள் அட்டகாசம் ?விளையாட்டு வீரர்கள் வேதனை :

சோழவந்தான்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டைக் கடந்த சிறப்புமிக்க பள்ளி.
இங்கு எந்த அரசு பள்ளியிலும் இல்லாத அளவிற்கு விளையாட்டு மைதானம் பெரியதாக அமைந்துள்ளது. இங்கு அதிகாலை முதல் பள்ளி ஆரம்பிப்பதற்கு முன்பாக உள்ள இடைவெளியில் சோழவந்தான் உட்பட இப்பகுதி கிராமங்களிலிருந்து விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை இங்கே தமிழர் வீர விளையாட்டு களான கபடி,கூடைப்பந்து, இறகுப்பந்து,கால்பந்து, நீளம்,தாண்டுதல்,குதித்து விளையாடுதல்,ஓட்டப் பந்தயம்,ஈட்டி எறிதல் உட்பட அனைத்து விளையாட்டுகளும் விளையாடுவதற்கு வந்து தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதில், மாவட்டம்,மாநிலம், தேசிய அளவில் பதக்கம் வாங்கிய வீரர்களும் இதில் பங்கு பெறுகின்றனர். போலீஸ் மற்றும் ராணுவத்தில் சேர விரும்புபவர்கள் இங்கு வந்து பயிற்சி எடுக்கின்றனர்.இங்குள்ள மைதான சுற்றுச்சுவர்கள் சமூக விரோதிகளால் சேதப்படுத்தி மைதானத்துக்குள் இரவு பகல் பாராமல் மது அருந்துவதும் கஞ்சா குடிப்பதும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
சிலர் ஆடு,மாடுகளை இங்கு வந்து மேய்கின்றனர். .மது அருந்துபவர்கள் குடித்த பாட்டில்களை உடைத்து விட்டுச் செல்கின்றனர். இதுகுறித்து இங்கு விளையாடக்கூடிய விளையாட்டு வீரர்கள் மன வேதனையுடன் கூறுகின்றனர்.

பார்த்தசாரதி வயது 23 …

ஈட்டி எறிதல் வீரர் கூறியபோது இங்கு விளையாடுவதற்கு ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் இதுபோன்று கிடைக்காது. அரசு இந்த மைதானத்தை பாதுகாக்க சுற்றுச்சுவரை உயரமாக கட்டித்தர வேண்டும், அந்தச் சுவரில் சமூக விரோதிகள் ஏறி குதிக்காத வாறு தடுப்பு வேலி அமைக்க வேண்டும். இங்கே இளம் பெண்களும் வந்து விளையாடுவது குறிப்பிடத்தக்கது. விளையாடக்கூடிய அனைத்து வீரர்களுடைய கோரிக்கையாக நான் கேட்டுக்கொள்கிறேன் .இந்த மைதானத்தை முறையாக பராமரித்து பாதுகாத்து மாலை மற்றும் இரவு நேரங்களில் விளையாடுவதற்கு மின் விளக்கு வசதி,கழிப்பறை வசத, தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும். இதனால் ,இப்பகுதி விளையாட்டு வீரர்களை கூடுதலாக ஊக்குவிக்கும் . சோழவந்தான் பகுதி விளையாட்டு சிறுவர் மற்ற இளைஞர்கள் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வாய்ப்பாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

சவுந்தரபாண்டி சமூக ஆர்வலர் கூறுகையில் …

சோழவந்தான் வெற்றிலை பெயர் பெற்றதோ அதேபோல் கூடைப்பந்து போட்டியில் இப்பகுதியில் உள்ள விளையாட்டு வீரர்கள் தேசிய அளவில் பல்வேறு பதக்கங்கள் பெற்று வந்திருக்கின்றனர். என் போன்றவர்கள் மருத்துவர் ஆலோசனையின்பேரில் விளையாடுவதற்கு வந்திருக்கின்றோம் ஏற்கனவே எனக்கு விளையாட்டில் ஆர்வம் இருப்பதால் தினசரி அதிகாலையில் வந்து ஓட்ட பயிற்சி எடுத்து வருகிறேன் இங்கு விளையாட்டு பயிற்சி இருக்க கூடிய சாதனங்கள் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டுள்ளது இதனால் சில விளையாட்டு வீரர்களுக்கு விளையாட முடியாத நிலையில் உள்ளனர் மாவட்ட நிர்வாகம் இந்த மைதானத்தை பாதுகாக்க சுற்றுச்சுவர் எடுத்து விளையாட்டு ஆர்வம் உள்ளவர்களை ஊக்குவிப்பதற்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: