LatestNews
போலி ஆவணம் மூலம் மோசடி..
தன்னார்வ அமைப்பில்
போலியான ஆவணங்களை பயன்படுத்தி 77 லட்சம் ரூபாய் மோசடி: 5 பேர் மீது வழக்கு"
மதுரை
மதுரையைச் சேர்ந்த சாந்தி முத்தரசன் என்பவர் சேலத்தில் உள்ள சுகம் என்ற தொண்டு நிறுவனத்தின் பங்காளராக உள்ளாராம்.
இந்த நிலையில், அந்த நிறுவனத்தில் பணியாற்றிய சிவராணி, சிவகாமி,லோகேஸ்வரி உட்பட 5 ஊழியர்கள் போலியான ஆவணங்களை பயன்படுத்தி சுமார் 77 லட்சம் ரூபாய் அளவிற்கு மோசடி ஈடுபட்டதாக சாந்தி முத்தரசன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்ததார்.
அதன் எதிரொலியாக மதுரை மாநகர குற்றப் புலனாய்வுப் பிரிவில் 5 பேர் மீதும் 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
LatestNews
கிராம மக்கள் முற்றுகை போராட்டம்..

ஆட்சியர் அலுவலக முன்பு முற்றுகை போராட்டம்:
மதுரை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட
கொம்பாரி கிராம ஊராட்சியில் உள்ள கீழக் கண்மாய் மற்றும் மேலக் கண்மாய்களுக்கு நிலையூர் – கம்பிகுடி கால்வாயிலிருந்து தொட்டியபட்டி பிரிவிலுள்ள நெடுமதுரை கடல் வழியாக மேற்சொன்ன கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க ஆவணம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தும் , தண்ணீர் திறந்து விடக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்த திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆசிக்கை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே அவரை மீண்டும் பணியிலமர்த்தக் கோரியும் கொம்பாரி
ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில்
கொம்பாரி ஊர் பொதுமக்கள் சுமார் 450 பேர் தங்களது குடும்ப அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக கூறி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுக்கை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.கி
LatestNews
திடீரென வீடு இடிந்து விழுந்தது…

மதுரை தெற்கு வாசல் மீனாட்சி டாக்கீஸ் அருகே வீடு ஒன்று திடீரென இடிந்தது.
தகவல் கிடைத்ததும், மதுரை தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.
LatestNews
ஜெயலலிதா கோயில் கும்பாபிஷேகம்..

ஜெ.கோயில் கும்பாபிசேகத்திற்கு கிராமம் கிராமாக அமைச்சர் உதயகுமார் அழைப்பு
திருமங்கலம் :
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில்ஜெ.பேரவை சார்பில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் அம்மா கோயில் என்ற பெயரில் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ.க்கு கோயில் கட்டப்படுகிறது. இதில் இருவருக்கும் 8 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், ஜன.30 ல் கும்பாபிசேகம் நடக்க உள்ளது.
இந்த கும்பாபிசேகத்திற்கு முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்காக திருமங்கலம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அமைச்சர் உதயகுமார் நேரில் சென்று கும்பாபிசேகத்தில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.