மதுரையில் மழை

மதுரையில் பல பகுதிகளில்
மாலை முதல் மழை

மதுரை :

மதுரையில் இன்று மாலையில் இருந்து வானம் இருட்டிக் கொண்டே இருந்தது. மாலை 6 மணியளவில் இடி மின்னலுடன் மழை பெய்தது. மதுரையின் முக்கியப் பகுதியான மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், ஒத்தக்கடை, உத்தங்குடி, கோ.புதூர், டி.ஆர்.ஓ. காலனி, போன்ற பகுதிகளில் மழை பெய்தது.
அதே போல், பெரியார் நிலையம், எல்லீஸ்நகர், எஸ்.எஸ்.காலனி பைபாஸ் ரோடு, அண்ணா நகர், மேலமடை, கருப்பாயூரணி, வரிச்சூர், களிமங்கலம், ராசாக்கூர், மதுரை காளவாசல் பகுதியிலும் மழை பெய்து வருகிறது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: