வேளாண் சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்

சோழவந்தானில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தானில் திமுக மற்றும் கூட்டணி கட்சியின் சார்பில் மத்திய அரசின் வேளாண் மசோதாவை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு திமுக பேரூர் செயலாளர் முனியாண்டி தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். மாவட்ட விவசாய அணி முருகன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். இதில் மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவால் விவசாயிகளுக்கு ஏற்படும் துயர் குறித்து கூட்டணி கட்சியினர் விரிவாக பேசினர். இதில் மதிமுக ஒன்றிய செயலாளர் துரைப்பாண்டி, சிபிஐ ஜோதி ராமலிங்கம், மூர்த்தி, அஇபாபி மாரியப்பன், காங்கிரஸ் முத்துப்பாண்டி, கணேசன், மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கண்ணன், ராஜா என்ற பெரிய கருப்பன், அய்யப்பன்,கேபிள் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: