வெடி விபத்து ஒருவர் சாவு..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து….
இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு…..

விருதுநகர் :

விருதுநகர் அருகே குந்தலபட்டியில், திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

விருதுநகர் அருகே குந்தலபட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆலையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மருந்து கலக்கும் அறையில், எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மருந்து உராய்வினால், அந்த அறை வெடித்துச் சிதறி தரைமட்டமானது. அந்த அறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த,
செங்குன்றாபுரத்தை சேர்ந்த கிருஷ்ண குமார் (55) என்பவர், விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கிருஷ்ணகுமார் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: