வேளாண் சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி க் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

மத்திய வேளாண் சட்டத்தை எதிர்த்து பாலமேட்டில் திமுக கூட்டணிக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்:

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேட்டில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை எதிர்த்து, திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.
முன்னாள் பேரூராட்சி துணை சேர்மன் பாலசுப்ரமணி, திமுக இளைஞர் அணி பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வைரமணி, சந்திரசேகரன், லட்சுமணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மணி, சேகர், வீரணன், மதிமுகவைச் சேர்ந்த முருகேசன் பழனிவேல், திமுகவைச் சேர்ந்த சந்திரய்யா, தண்டபாணி, செல்வம், பாலகிருஷ்ணன், முருகேசன், பிச்சை, தகவல் தொழில் நுட்ப பிரிவு விஜய், தமிழ் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தங்கபாண்டி உள்ளிட்டோர், மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: