தாய் இரண்டு குழந்தைகளுடன் தீக்குளிப்பு..

*குடும்பத்தகராறில் விபரீதம்* *தாய் இரண்டு*
*குழந்தைகளுடன் தீக்குளிப்பு*
*2 குழந்தைகள் பலி*
*தாய் உயிருக்கு போராட்டம்*

மதுரை:

மதுரை மேலவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி.

இவர் அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் இருவருக்கும் இடையே அவ்வபோது பிரச்சினை ஏற்பட்டு வந்தது

இந்த நிலையில் நேற்று இரவு மனைவி தமிழ்ச்செல்வி தன்னுடைய இரண்டு குழந்தைகளான வரணி ஸ்ரீ மற்றும் வர்ணிகா ஸ்ரீ ஆகிய குழந்தைகளுக்கும் தனக்கும் தீவைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்

இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து திடீர் நகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: