LatestNews
சாப்டூரில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா..

மதுரை மாவட்டம் சா ப் டூ ரில் மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் விழா மற்றும் நரேந்திர மோடி பிறந்தநாள் விழா நடைபெற்றது
மதுரை மாவட்டம் பேரையூர் ஒன்றியம் சாப்டூர் கிளையில் அதிமுக திமுக காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சியிலிருந்து பாஜகவில் இணையும் விழா பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா மற்றும்கொடியேற்று விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம் பேரையூர் ஒன்றியம் சாப்டூர் கிளையில் திமுக காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சியிலிருந்து பாஜகவில் இணையும் விழா நடைபெற்றது .மாநில விவசாய அணி தலைவர் முத்துராமன் ஜி தலைமை வகித்தார் மாநில விவசாய அணி துணை தலைவர் மணி முத்தையா ,மதுரை மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் முன்னிலை வகித்தனர் ,விழாவில் பேருந்து நிலையம் அருகே பாஜக கட்சி கொடி ஏற்றப்பட்டது .பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது வட’கததி அம்மன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவிலில்ல் சிறப்பு வழிபாடு சேய்யப்பட்டது,.மாவட்ட விவசாய அணி தலைவர் பூமிநாதன், மாவட்ட விவசாய அணி துணை தலைவர் ஆதி குளோபல் ஆதிசங்கர், இன்ஜினியர் ராமசாமி ,இளைஞர் அணி மாவட்ட தலைவர் மணி மணிகண்டன், ஐடி விங் தலைவர் வாசு ,செயற்குழு உறுப்பினர் ஞானப்பழம், ஒன்றிய தலைவர் பன்னீர்செல்வம், விவசாய அணி தனிக்கொடி, ஒன்றிய தலைவர் கருப்பையா, நகரத்தலைவர், ராமராஜன். செந்தில்குமார்,கருப்பையா ,கார்த்திக், லட்சுமி நாராயணன் (சதுரகிரி பரம்பரை அறங்காவலர்) ,சுந்தரவிக்னேஷ், சுந்தரமூர்த்தி,முருகன்,வனங்காமுடி,டகருப்பையா, விக்னேஷ், நாகபாண்டி, ஆனந்த்ராஜ் , அபி,ஆனந்தன், முருகன், ராம்குமார், சந்தனகுமார், ரவி, மாசானம், சுரேஷ்குமார், முத்துராஜ், நாகராஜ், ஈஸ்வரன், தங்கமுத்து, சின்னமுத்து, செந்தில்குமார், ராஜா, ராமர், சுந்தரம், ராமையா, கர்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கோண்டனர், இந்த இந்த நிகழ்ச்சியின்போது மாநில விவசாய அணி துணை தலைவர் முத்துராமன் ஜி அவர்களின் பிறந்த நாளும் மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் பிறந்தநாளும் கொண்டாடப்பட்டது .
LatestNews
போலீஸ் கொடி அணிவகுப்பு…

திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள அவனியாபுரம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொடி அணிவகுப்பு பேரணி :
மதுரை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி மேல்நிலைப் பள்ளியில் இருந்து கொடி அணிவகுப்பு புறப்பட்டு அவனியாபுரம் பேருந்து நிலையம் கணக்குப்பிள்ளை தெரு பெரியார் நகர் இம்மானுவேல் நகர் பிரசன்னா காலனி வழியாக அவனியாபுரம் சிஎஸ் நகரில் பேரணி முடிவு பெற்றது.
இதில் , மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் துணை கமாண்டன்ட் ஜிந்தா தலைமையில் 75 வீரர்களும் , திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர் சிவராஜ் பிள்ளை மற்றும் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பெத்துராஜ், சார்பு ஆய்வாளர் தண்டீஸ்வரர், தமிழ்ச்செல்வம் அடங்கிய போலீசார் கொடி அணிவகுப்பு பேரணியில் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய சிறப்பு காவல் படை வீரர்கள் அணி வகுப்பை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
LatestNews
வாக்கு மையங்கள் ஆய்வு…

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தேர்தல் வாக்கு மையங்கள் ஆய்வு:
சோழவந்தான்
வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் மற்றும் தென்கரை வருவாய் உட் கோட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள வாக்குச் சாவடி மையங்களை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். இதில், வாடிப்பட்டி தாசில்தார் பழனி குமார் தலைமை நில அளவையாளர் செந்தில் தேர்தல் துணை வட்டாட்சியர் இசக்கிமுத்து வருவாய் ஆய்வாளர்கள் அழகுகுமார் ராஜன் கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயப்பிரகாஷ் முத்துக்குமரன் மணிவேல் சூசைஞானசேகரன் முபரக் சுல்தான் பழனி வெங்கடேசன் கார்த்திக் செல்வமணி சுரேஷ் கார்த்திஸ்வரி முத்துராமலிங்கம் பாண்டி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர் .
மொத்த வாக்காளர்கள் 2180 87 இதில், ஆண்கள் வாக்காளர்கள் 107097 பெண் வாக்காளர்கள் 110 363 மற்றவர்கள் 10 மொத்த வாக்கு மையம் 126 உள்ளன இதில் 70 மையங்களை பார்வையிட்டனர் கட்டட தன்மை கழிப்பறை வசதி மின்வசதி காற்றோட்ட வசதி உட்பட அடிப்படை வசதிகள் எவ்வாறு உள்ளன என்று ஆய்வு செய்தனர்
LatestNews
களைகட்டிய மாசி பொங்கல் விழா..

சிவகாசி பகுதிகளில் களை கட்டிய மாசி தெருக்கட்டுப் பொங்கல் விழா…..
சிவகாசி :
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாசி மாத தெருக்கட்டுப் பொங்கல் விழா களைகட்டியுள்ளது. சிவகாசி பகுதி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் தெருக்கட்டுப் பொங்கல் என்று கூறப்படும், முத்தாலம்மன் திருவிழா அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு தெருவிலும் நான்கு வீதிகள் சந்திக்கும் இடத்தில், மண் மற்றும் மஞ்சள், சந்தனத்தால் ஆன முத்தாலம்மன் உருவம் வடிவமைக்கப்பட்டு ஐந்து நாட்கள், 7 நாட்கள் தொடர்ச்சியாக பூஜைகள் நடத்தப்படும். இதற்காக தெருக்கள் முழுவதும் வேப்பிலை தோரணம் கட்டப்பட்டு, காப்பு கட்டி விரதம் இருந்து வருவார்கள். பெண்கள் நேர்த்திகடன் விரதம் இருந்து முளைப்பாரி வளர்த்து வருவார்கள். விழாவி்ன் நிறைவு நாளன்று தங்களது பகுதிகளிலிருந்து, சிவகாசி நகரில் நான்கு ரதவீதிகளில் முளைப்பாரி, பால்குடங்கள் ஏந்தி கருப்பசாமி கோவில், மாரியம்மன் கோவில், பத்திரகாளியம்மன் கோவில்களுக்கு ஊர்வலமாக சென்றுவந்து தங்களது பகுதியில் உள்ள முத்தாலம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள். பின்னர் பூரண அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தெருக்களில் உள்ள மக்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்வார்கள். சிறப்பு பூஜைகள் முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும். தெருக்கட்டுப் பொங்கல் ஆரம்பித்த நாள் முதல் தினமும் சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். ஒவ்வொரு தெருவில் இருக்கும் பலதரப்பட்ட மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, இந்த தெருக்கட்டுப் பொங்கல் விழா நடத்தப்படுவதாக கூறுகின்றனர். சிவகாசி நகர் பகுதியில் மட்டும் நடந்துவந்த தெருக்கட்டுப் பொங்கல், தற்போது சிவகாசியை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.