சினிமா இயக்குநருக்கு கொலை மிரட்டல்:

சினிமா இயக்குனர் கொலை மிரட்டல் விடுவதாக நிதி நிறுவன ஊழியர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் காரைக்குடியில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். நிதி நிறுவனத்தில் 500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில் கடந்த 7 தேதி அன்று சினிமா இயக்குனர் பிரபு ராஜா காரில் கடத்திச் சென்று, தங்களது வாடிக்கையாளர் மாணிக்கம் மற்றும் அவரது மனைவி கயல்விழியின் விவரங்களை தருமாறு கூறி தன்னை சித்திரவதை செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார். பின்னர் புகாரை காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. திரைப்பட இயக்குனர் பிரபு ராஜா திரைப்பட பாணியில் நிதி நிறுவன ஊழியரை காரில் கடத்தி சென்று கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: