ஆக்ஸிஜன் வழங்குவதில் தமிழகம் மிகை மாநிலம ்..அமைச்சர்

புதுக்கோட்டை

ஆக்ஸிஜன் வசதி வழங்குவதில் தமிழகம் மிகை
மாநிலமாக திகழ்கிறது: அமைச்சர்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை மாவட்டம்
அன்னவாசல் ஊராட்சி
ஒன்றியம்,
மேலூர் ஊராட்சி
அம்மன்பேட்டையில் ரூ.45 லட்சம் கட்டப்பட்ட
சமுதாய கூட கட்டடத்தினை திறந்து வைத்தும்,
மேலூரில் ரூ.48 லட்சம்
மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள சமுதாய கூட கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்;.
இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்
.பி.உமாமகேஸ்வரி
தலைமையில்
கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்
பா.ஆறுமுகம்
முன்னிலையில் நடைபெற்றது.
பின்னர் ,
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள இந்நேரத்தில்
பொது மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடனும்
கவனத்துடனும்
இருக்க வேண்டும்.
பொது மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம்
அணிவதுடன் வயதானவர்கள்ää இணைநோய் உள்ளவர்கள் தேவையற்ற
பயணத்தை தவிர்க்க வேண்டும். அரசு மேற்கொண்ட சிறப்பான
நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. களத்தில்
நேரடியாக காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு கொரோனா அறிகுற

உடையவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து கொரோனா
பரிசோதனையில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு அரசு
மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளித்து குணப்படுத்தப்பட்டு
வருகிறது.
பொது மக்களுக்கு காய்ச்சல்ää சளிää இருமல் போன்ற ஏதேனும் அறிகுறிகள்
ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையினை அணுகி
பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைக்கு
வருபவர்களை நுரையீரல் பாதிப்பின்றி குணப்படுத்தவது எளிதாகும்.
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்
வகையில் கிராமப்புற மருத்துவமனைகளிலும் தேவையான மருத்துவ
உபகரணங்களுடன் தயார்நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர்
உத்தரவின்படி தமிழகம் முழுவதும்
மினி கிளினிக்குகள் துவங்கப்பட உள்ளன. இதில் பணிபுரிய கூடிய
மருத்துவர்கள்,
செவிலியர்கள்,
மருந்தாளுனர்கள் போன்றவர்களை தேர்வு
செய்யும் பணிகள் நடைபெற்று வருவதுடன் விரைவில் மினி கிளினிக்குகள்
பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
தமிழகம் ஆக்ஸிஜன் உற்பத்தியில் மிகை மாநிலமாக திகழ்வதுடன்
தேவைக்கு அதிகமான ஆக்ஸிஜனை அண்டை மாநிலங்களுக்கு வழங்கி
வருகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான ஆக்ஸிஜன்
வசதி செய்யப்பட்டுள்ளதுடன் கூடுதலாக ஆக்ஸிஜன் வசதி
அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போன்று கிராமப்புற ங்களில் 30 படுக்கைகள்
கொண்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆக்ஸிஜன் வசதி
செய்யப்பட்டுள்ளது
என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ,
யூனியன் சேர்மன் ராமசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் சாம்பசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: