சத்துணவு பணியிடங்களுக்கு விண்ணப்பிக் கலாம்..

On Sun, Sep 27, 2020, 17:18 Ravi Chandran <tmlravi> wrote:

சத்துணவு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

கலெக்டர் டி.ஜி.வினய் அறிவிப்பு

மதுரை :

மதுரை மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 358 அமைப்பாளர்கள் 71 சமையலர்கள் 559 சமையல் உதவியாளர்கள் பணியிடங்களை நேரடியாக நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . அக்டோபர் 5 முதல் மாலை ஐந்து நாற்பத்தி ஐந்து மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாவட்ட கலெக்டர் டி.ஜி. வினய் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தொடர்புடைய ஊராட்சி ஒன்றியங்கள் மதுரை மாநகராட்சி திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் மட்டுமே கொடுத்து ஒப்புதல் ரசீது பெறவேண்டும். விண்ணப்பங்கள் இலவசமாக அந்தந்த அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம். மதுரை மாவட்ட இணையதளம் இதிலும் பறவை பதிவிறக்கம் செய்யலாம் . நேரடி நியமன நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் இறுதி முடிவுக்கு உட்பட்டதாகும். விண்ணப்பத்துடன் கல்வி மற்றும் கல்வி மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் மதிப்பெண் சான்றிதழ் ஜாதிச் சான்று விதவை மற்றும் கணவரால் கைவிட்டவர்கள் இருப்பின் உரிய அலுவலரிடம் இருந்து பெற்ற சான்று வருவாய் சான்றிதழ் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான சான்று இணைக்கவேண்டும். அனைத்து பணிகளும் பெண்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் டி.ஜி. வினய் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: