மதுரையில் குறைந்து வரும் கொரோனா:

மதுரையில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது: அமைச்சர்:

மதுரை, ஜூலை. 22.

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
வருவாய் பேரிடர்
மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர்
.ஆர்.பி.உதயகுமார்
செய்தியாளர்களை சந்தித்து,
தெரிவிக்கையில்:-
உலகெங்கும் நிலவுகின்ற கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த அசாதாரன சூழ்நிலையிலிருந்து தமிழக மக்களை காப்பாற்றுவதற்காக
தமிழ்நாடு முதலமைச்சர்
மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்திய பெருநாட்டிற்கே முன்னுதாரணமாக விளங்குகின்றது.
மிக விரைவிலே ,இயல்பு நிலைக்கு திரும்புகிற இலக்கை நோக்கி சென்றுகொண்டிருக்கும் இவ்வேளையில்,
கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை விழிப்புணர்வை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் பணியினை 100 சதவீதம் நாம் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். நோய் தடுப்புப் பணியில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் மாநகராட்சி பகுதிகளிலிலும்,
கிராமப்புற பகுதிகளிலே ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலமாகவும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு ஆரம்பநிலையிலேயே நோய் தொற்றை கண்டறிந்து அவர்களுக்கு அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கடந்த ஒருவார காலமாக நமக்கு ஆறுதல் தருகிற புள்ளி விவரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. இதுவரை கொரோனா தொற்று ஏற்பட்டோர் 8517 நபர்களாவர்
மாவட்ட ஆட்சித்தலைவர்
நேரடி கண்காணிப்பில் மாநகராட்சி ஆணையாளர் ,
அரசு இராஜாஜி மருத்துவமனை முதல்வர்
குழுவாக இனைந்து போர்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டதின் காரணமாக 5070 நோயாளிகள் குணம்பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது சிகிச்சையில் 3680 நோயாளிகள் உள்ளனர். 2235 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. அதிலே கலந்து கொண்ட 156289 நபர்களில் 110864 பரிசோதனைகள் எடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து மதுரை மாவட்டத்தில் தான் அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 730 மருத்துவர்களும்,
890 செவிலியர்களும்,
3800 களப்பணியாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அரசு இராஜாஜி மருத்துவமனையில் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கை ஆரம்பநிலையில் 5 சதவிகிதமாக இருந்தது. பின்பு ,பல்வேறு காரணங்களினால் 15 முதல் 18 சதவிகிதமாக அதிகமானது.

தமிழ்நாடு முதலமைச்சர்

அறிவுறுத்தலின் படி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதாலும்,

நாம் மேற்கொண்ட தீவிர மருத்துவ சிகிச்சையின் காரணமாகவும் நோய்த் தொற்று 7 சதவிகிதமாக கட்டுக்குள் கொண்டு வரபட்டதுää தற்போது 3 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளில் கெரோனா தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கை 7 முதல் 8 சதவிகிதமாக உள்ளது. அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு கூடுதல் ஆர்.டி.பி.சி.ஆர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளதால் தினமும் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை தற்பொழுது 4500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை மையங்களில் பணிபுரியும் அலுவலர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று குறைந்து வருவது நமக்கு ஆறுதல் அளிக்கிறது. இருந்தபோதிலும் ‘மாநகராட்சி பகுதிகளிலும்,
கிராமப்புற பகதிகளிலும் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தொழில்துறையை ஊக்குவிப்பதற்காக ரூ.10
கோடி மதிப்பில் ஆறு மாவட்டங்களில் தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு,
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்ற வகையிலும்,
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலும்
தமிழ்நாடு முதலமைச்சர்
பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.டி.ஜி.வினய்,
மாநகராட்சி ஆணையர்
எஸ்.விசாகன்
மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பி.செல்வராஜ் ,
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் மரு.சங்குமணி
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்
ராஜசேகர்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: