தேசீய நெடுஞ்சாலையில் சாலை மறியல்..

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே முறம்பு பகுதி தேசிய நெடுஞ்சாலையில் கிழவிகுளம் பகுதியினரை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பந்தல் போட்டு சாலை மறியல். 3 மணி நேரத்திற்க்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு.

இராஜபாளையம் அருகே உள்ள கிழவிகுளம் பகுதியில் வசிக்கும் ஆவுடைநாயகம் மற்றும் மணிமுத்து என்பவர்கள் இரவு பணி முடிந்து வீடு திரும்பும் போது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் தாக்கியதால் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவம் இடத்திற்க்கு வந்து விசாரனை செய்துள்ளனர்.

இருப்பினும் இன்று காலை கிழவிகுளம் பகுதி கிராம மக்கள் சம்மந்தபட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தி முறம்பு பகுதி தேசிய நெடுஞ்சாலையில் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் சாலை நடுவே பந்தல் அமைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். சம்பவ இடத்திற்க்கு வந்த ஏடிஎஸ்பி மாரிராஜ் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர் இருப்பினும் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். இறுதியாக விசாரணையின் அடிப்படையில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என காவல்துறை சார்பில் உறுதியளித்து தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக ராஜபாளையம் – திருநெல்வேலி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: