பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு..

திருமங்கலம் பிரதானக் கால்வாய்க்கு தண்ணீர் திறப்பு

வருவாய்த்துறை அமைச்சர் திறந்து வைத்தார்

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம், திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் ஓரு போகத்துக்கு தண்ணீரை, பேரணையில் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் திறந்து விட்டார்.
தமிழக முதல்வர் உத்தரவுப்படி, பெரியாறு பாசனப் பகுதியில், திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசனப் பகுதியான 19.436 ஏக்கருக்கு நிலங்களுக்கு விநாடிக்கு 230 கன அடி வீதம் செப். 27 முதல் 120 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் திறப்பால், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் 13723 ஏக்கர் நிலங்களும், திருமங்கலம் வட்டத்தில் 4369 ஏக்கர் நிலங்களும், வாடிப்பட்டி வட்டத்தில் 1201, ஏக்கர் நிலங்களும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் 146 ஏக்கர் நிலங்களும் பாசனம் பெறும்.
இந்த வேலையில், குறுகிய கால பயிர்களை பயிரிட்டு பயன்பெற பொதுப்பணித்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி,

சட்டப்பேரவை உறுப்பினர் நீதிபதி, நத்தம் அதிமுக பிரமுகர் கண்ணன் மதுரை மாவட்ட அதிமுக நிர்வாகி ஐயப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: