விவசாயிகள் மறியல் 600 பேர் கைது

விவசாய சட்டதிருத்தமசோதாவை திரும்பப்பெறக்கோரி
விவசாயிகள் மறியல் போர்:
புதுகையில் 600 பேர் கைது

புதுக்கோட்டை, செப்.26-, மத்திய அரசின் விவசாயிகளுக்குபாதகமான அவசர சட்டங்களை திரும்பப்பெறக்கோரி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டங்களில் 600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டன.

போராட்டங்களில் அத்தியவாசியப் பொருட்கள் அவசரச் சட்டம், வேளாண் விளைபெருட்கள் வணிக ஊக்குவிப்புச் சட்டம், விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசரச் சட்டம், மின்சார திருத்தச் சட்டம் ஆகிய விவசாயிகளை ஒடுக்கும் கார்பரேட் ஆதரவுச் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

புதுக்கோட்டை பேருந்துநிலையம் அருகில் நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சி.சோமையா, ஒன்றியச் செயலாளர் எம்.வீரப்பன் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ரகுபதி, பெரியண்ணன் அரசு, திமுக மாவட்டப் பொறுப்பாளர் கே.கே.செல்லப்பாண்டியன், சிபிஐ மாவட்டச் செயலாளர் மு.மாதவன், விதொச மாநில பொருளாளர் எஸ்.சங்கர் மற்றும் நிர்வாகிகள் சி.அன்புமணவாளன், எம்.ஜியாவுதீன், சி.அடைக்கலசாமி, சி.ஜீவானந்தம், ஏ.எல்.ராசு உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட போராட்டத்தில் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல்கந்தர்வகோட்டை,கறம்பக்குடி,ஆலங்குடி,பொன்னமராவதி,அன்னவாசல்,கீரனூர் ஆகிய இடங்களிலும் மறியல் போராட்டம் நடந்து கைது செய்யப்பட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: