சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட ்டம்..

சாலை பணியை தனியாரிடம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து பணியாளர் சங்க ஆர்ப்பாட்டம்: மனு முறையீடு வழங்கும் இயக்கம்

மதுரை

நெடுஞ்சாலைத்துறையில் சாலைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது, நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களுக்கு 10 சதவீதம் ஆபத்துப் படி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியூறுத்தி, மதுரை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு
பொறியாளர் அலுவலக வாசலில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாநில பொருளாளர் இரா. தமிழ் தலைமை வகித்தார்.
திண்டுக்கல் கோட்டச் செயலர் ராஜா வரவேற்றார்.
மதுரை மாவட்டச் செயலர் சோலையப்பன், திண்டுக்கல் கோட்டச் செயலர் சிவகுமார், தேனி மாவட்டத் தலைவர் பரமேஸ்வரன்,ஜெ. மூர்த்தி மாநில நிர்வாகி, மாநிலச் செயலர் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் மதுரை நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளரிடம் கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனர்.
மதுரை கோட்டச் செயலர் மனோகரன் நன்றி கூறினார்.
முன்னதாக கோரிக்கை வலியூறுத்தி அலுவலக வாசலில் கோஷமிட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: