முறையாக தண்ணீர் திறக்காததால், விவசாயிகள ் அவதி..

சோழவந்தான் வடகரை கண்மாயில் தண்ணீர் முறையாக திறக்காததால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி:

சோழவந்தான்,செப்.24-

சோழவந்தான் ஆலங் கொட்டாரம் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் நடந்து வருகிறது இந்த விவசாயத்திற்கு சோழவந்தான் வடகரை கண்மாயில் இருந்து இரு கோபத்திற்கும் 9 மடை இருந்து பொதுப்பணித்துறை மூலம் உதவியாளர்கள் தண்ணீர் திறந்து விடுவது வழக்கம் இந்த ஆண்டு கடந்த ஆகஸ்டு 29 ஆம் தேதி விவசாயத்திற்கு கள்ளந்திரி வரை சுமார் 4,500 ஏக்கர் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது இதில் வட கரை கண்மாய் உட்பட்ட ஆயிரம் ஏக்கருக்கும் உட்பட்டதாகும் தற்போது 25 நாட்கள் ஆகியும் கண்மாயில் தண்ணீர் திறந்து படவில்லை இது குறித்து இப்பகுதி விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக்கூறியும் தண்ணீர் திறந்து விட்டபாடில்லை அதிகாரிகள் உடைய அலட்சியத்தால் இப்பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது இந்த கண்மாயில் உங்களது மடைகள் உள்ளன இதை பராமரிக்க பொதுப்பணித்துறை லஸ்கர் உள்ள இவர் மடையை பராமரிக்காததால் சில மடைகள் அடைத்தது அடுத்தபடியாக உள்ளது சில மடைகள் தண்ணீர் கசிந்து வீணாகிறது மடையில் உள்ள கதவுகள் துருப்பிடித்து ஆயில் போடாமல் பழுதடைந்து வந்துள்ளது இக் கண்மாய்க்கு தண்ணீர் நிரப்பாமல் அதிகாரிகளின் மெத்தன போக்கு விவசாயிகளுடைய வைத்து அடிப்பது போல் இருப்பதாக விவசாயிகள் கூறி வருகின்றனர் இது குறித்து அவர் கூறும்போது சோழவந்தான் வடகரை கண்மாய் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாயத்துக்கு தண்ணீர் தேக்கி வைப்பது காலம் தொட்டு வருகிறது தற்போது சில ஆண்டுகளாக இருபோக விவசாயம் ஒரு போகமாக நடந்து வருகிறது இதிலும் தற்போது கொரோனா தொற்றுநோயால் நாங்கள் மிகச் சிரமப்பட்டு வருகிறோம் இந்த நேரத்தில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் முதலமைச்சர் உத்தரவின்பேரில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து கண்ணந்தரி வரை உள்ள விவசாயிகளுக்கு கடந்த 29ஆம் தேதி தண்ணீர் திறந்து பெரியாறு வாய்க்கால் யிலிருந்து வருடந்தோறும் வட கண்மாய்க்கு விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் வந்து சேரும் இந்த ஆண்டு இதுவரை 25 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது கண்மாய்க்கு தண்ணீர் வந்தபாடில்லை ஏற்கனவே கண்மாய் பல ஆண்டுகளாக தூர் வாராமல் மண்மேடு படிந்து மழைத் தண்ணீர் தேங்கியுள்ளது. இங்குள்ள அளவு காட்டும் ஆண்கள் தூண்டி மூன்று அடியாகும் பெண்கள் ஜூன் 12 அடியாகவும் உள்ளது தற்போது சுமார் ஐந்து அடி அளவுதான் தண்ணீர் இருப்பதாக தெரிகிறது அதிகாரிகள் செவிசாய்க்காத விவசாயிகள் மனவேதனையில் மனவேதனையில் உள்ளோம் என்று கூறினார் இதேபோல் விவசாயி திருப்பதி கூறுகையில் எங்கள் பகுதியில் இரு போகம் விவசாயம் நடைபெற நடைபெறும் தற்போது கண்மாயில் தண்ணீர் இல்லாததால் நாற்றாங்கால் கூட நடக்கவில்லை நாங்கள் பொதுப்பணி துறை அதிகாரியிடம் எங்களுக்கு தண்ணீர் வேண்டும் என்று முறையிட்டபோது அவர் எங்களிடம் ஏதோ எதிர்பார்ப்பது போல் தெரிகிறதுநாங்களே சில ஆண்டுகளாக இயற்கை சீற்றத்தால் பல சிரமத்திற்கு ஆளாகி பட்ட நிலையில் சம்பள வாங்கக்கூடிய அதிகாரிகள் எங்களிடம் எதிர்பார்ப்பது வேதனை அளிக்கிறது எது எப்படியோ விவசாயிகளை ஒரு கண்ணில் சுண்ணாம்பும் ஒரு கண்ணில் வெண்ணையும் விடுவதுபோல் அதிகாரிகள் நடந்துகொள்கின்றனர் சாலாச்சிபுரம் நரிமேடு போன்ற பகுதியில் விவசாயிகள் பெரியார் வாய்க்கால் தண்ணீர் மூலம் விவசாயம் செய்து கொண்டு இருக்கிறார்கள் வட கண்மாய் பாசனத்தில் உள்ள விவசாயிகள் நாற்றாங்கால் உழவு கூட செய்ய வில்லை குறிப்பிடத்தக்கது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: